பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாக்கம் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பும், வெளிவந்த பின்னும் படங்களைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் இதையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். டுவிட்டர் இந்தியா நன்றாக சம்பாதிக்கிறதோ இல்லையோ, டுவிட்டரை வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களில் தென்னிந்திய திரையுலகம் டுவிட்டர் மூலம் நன்றாக வளர்ந்து வருவதாக டுவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. 'காலா' படத்தின் வெளியீட்டிற்கு முன்பே 20 லட்சம் டுவீட்டுகளுக்கும் மேல் அந்தப் படம் பற்றி பதிவிடப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஏற்கெனவே அதிகமாகப் பேசப்படும் படமாக 'காலா' படம் அமைந்துள்ளதாம்.
யு டியூபில் டிரைலரை வெளியிடுவது போலவே டுவிட்டரிலும் 'காலா' டிரைலரை நேற்று வெளியிட்டுள்ளார்கள். ஆனால், டுவிட்டரில் வெறும் 12 ஆயிரம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதே சமயம் யு டியூபில் 'காலா' டிரைலருக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.
'காலா' வெளிவர இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் டுவிட்டரில் இன்னும் பல லட்சம் டுவீட்டுகள் வெளியாக வாய்ப்புள்ளது.