'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆர்.கே.நகர். அரசியல் நையாண்டி கலந்த கதையில் உருவாகி உள்ள இப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இவருடன் சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே ஆர்.கே.நகர் படத்தில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படம் சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் U/A சான்று அளித்திருக்கிறார்கள்.
"ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய படங்களுக்கு தூணாக இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். இந்த நம்பிக்கையுடன், மொத்த குழுவும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறோம்" என தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி தெரிவித்திருக்கிறார்.