தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ் படம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார் சதீஷ். 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் 40 படத்தை தொடவில்லை. பாடி லாங்குவேஜ் இன்றி வெறும் வசனங்களால் சிரிக்க வைக்க முயற்சிப்பதாக அவர் மீது விமர்சனம் உண்டு.
இந்த நிலையில் அவரை அறிமுகப்படுத்திய அதே சி.எஸ்.அமுதன், தற்போது இயக்கி வரும் தமிழ் படம் 2.ஓ படத்தில் வில்லனாக நடிக்கிறார் சதீஷ். அதாவது காமெடி வில்லன். இதில் அவர் 10 கெட் அப் போட்டு பாடி லாங்குவேஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். இந்தப்படம் தனக்கு திருப்பம் தரும் என்று நம்புகிறார்.
இந்தப் படத்தில் சிவா ஹீரோ, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சந்தான பாரதி, மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், கண்ணன் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.