இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
விஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் இரும்புத்திரை. இந்தப் படம் டிஜிட்டல் இந்தியாவை விமர்சிக்கிறது. ஆதார்ட் கார்ட், ஏடிஎம் கார்ட், ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆகியவற்றில் உள்ள ஆபத்துக்களை விளக்குகிறது.
ஆதார்கார்ட் திட்டம் மோசமாக விமர்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் படத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. சில தியேட்டர்களில் முதல் நாள் காட்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஆதார்கார்ட் குறித்த காட்சி நீக்கப்பட்ட வசனங்களுடன் லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த காட்சியில் விஷால், சமந்தா, ரேபோ சங்கர் நடித்திருக்கிறார். அந்த காட்சியின் வசனங்கள் வருமாறு:
விஷால்: இப்பதான் தெளிவா பேசினாரு விஜய் ராஜூ
ரோபோ சங்கர்: சூரியனை தெர்மாகூல் வச்சி மறைக்கிறேன்னு சொன்னாரே அந்த மினிஸ்டரா...?
விஷால்: டெலிகாம் மினிஸ்டருக்கும் ஒயிட் டெவில் (அர்ஜுன்)க்கும் இடையில் ஏதோ நடந்திருக்கு. அவர் மூஞ்சில இருக்கிற பயத்தை பார்த்தியா..
சமந்தா: டெலிகாம் மினிஸ்டர் மூலம் அவன் என்ன எதிர்பார்க்கிறான்.
விஷால்: ஆதார் கார்ட்...
ரோபோ சங்கர்: அத வச்சி அவன் என்ன மாப்பிளை செய்யப்போறான்.
விஷால்: ஆதார் கார்ட் நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐடி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனிதனோட கைரேகையிலிருந்து, கண் ரேவை வரைக்கு இருக்கிற மாஸ்டர் கார்ட்.
ரோபோ சங்கர்: நீ... சொல்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு மாப்ள...
விஷால்: பயமுறுத்தல மாமா...நடக்கப்போறத சொல்றேன். இன்னிக்கு டிஜிட்டல் இந்தியாங்ற பேர்ல ஏடிஎம் மிஷின்லேருந்து ஓட்டிங் மிஷின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டலைசாகிடுச்சு. அவன் நினைச்சா நாசிக்ல நோட்டும் அடிக்க முடியும், ஓட்டிங் மிஷின்ல ஓட்டும் போட முடியும்.
ரோபோ சங்கர்: அப்போ அவன் யாரை நினைக்கிறானோ அவனைத்தான சிஎம் ஆக்க முடியும். இது தெரியாம ஓட்டுக்கு பைசா கொடுத்துக்கிட்டு திரியுறாங்க
விஷால்: இதுவரைக்கும் நம்ம போனை மட்டும் தான் ஹேக் பண்ணிக்கிட்டிருந்தான். இனிமே நம்ம லைபையே ஹேக் பண்ணப்போறான்.