இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தொடரி படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கி வரும் படம் கும்கி-2. கும்கி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்கு பெரும்பகுதி படப்படிப்பு முடிந்து விட்ட நிலையில், தற்போது கேரளாவில் உள்ள காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பிரபுசாலமன்.
இந்த படத்தில் புதுமுகங்கள் நடிப்பதாக செய்திகள் வெளியானதுபோதும் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது கும்கி-2வில் விஷ்ணுவிஷாலும், டாக் டர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் ஜோடி சேர்ந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் தயாராகிறது. அதன்காரணமாக தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.