இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெமினி படத்தில் ஓ போடு பாடலை பாடியவர் விக்ரம். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதை அடுத்து கந்தசாமி, ராஜபாட்டை, ஸ்கெட்ச் என சில படங்களில் பாடினார் விக்ரம். இந்நிலையில், தற்போது சாமி-2 படத்திலும் அவர் பாடயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அப்பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், நடிகர் விக்ரம் ஒரு நல்ல பாடகர். அவரது குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் கந்தசாமி படத்தில் அவரை பாட வைத்தேன். அந்த பாடல்களும் ஹிட்டானது.
அதனால், சாமி-2 படத்திலும் விக்ரமை பாட வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. மேலும், இந்த படத்தில் ஹரி-விக்ரம் இருவரும் விரும்புவது போன்ற மெலடியான பாடல்கள் உள்ளன. அதனால், ஹரி அனுமதி கொடுத்தால் இந்த படத்திலும் விக்ரமை பின்னணி பாட வைப்பேன் என்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.