தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மும்பை தாராவியில் வாழும் தாதாவாக ரஜினி நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் நானா படேகர் வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில், ரஜினிக்கும், நானா படேகருக்குமான மோதலே இந்த படமாம்.
காலா படத்தில் அரசியலும் உள்ளது என்று ஏற்கனவே ரஜினி தெரிவித்திருந்தார். அதேபோன்று இந்த படத்தில் சேரிப்பகுதியில் வாழும் மக்கள் குடியிருக்கும் நிலம் அபகரிக்கப்படுவதும், அதை மீட்க ரஜினி போராடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். அந்த வகையில், ரஜினியின் காலா சேரிப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலையும், நில அரசியலையும் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறதாம்.