'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன. அவற்றில் 10 படங்கள் கூட வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் நிறுத்தினர். அதன்பின்னர் பட வெளியீட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்களை முறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை 25ம் தேதி பல படங்கள் வெளிவருகின்றன. அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள் என்றாலும் ஒரே சமயத்தில் இத்தனை படங்கள் வெளிவருவது அவற்றிற்கே நல்லதல்ல.
“செம, திருப்பதிசாமி குடுமபம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, ஒரு குப்பைக் கதை, அபியும் அனுவும், காலக் கூத்து,” ஆகிய 6 படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த போட்டியில் இடம் பெற்ற 'செம போத ஆகாதே, பொட்டு' ஆகிய படங்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டன. இல்லையென்றால் 8 படங்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கும்.
இந்த வார வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள 6 படங்களில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் மட்டும் தான் ஓரளவிற்கு முன்னணி நடிகர் நடித்துள்ள படம். மற்ற படங்கள் எல்லாம் சிறிய நடிகர்கள் நடித்துள்ள படங்கள் தான்.
கடந்த வாரம் வெளிவந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வார படங்கள் எப்படி அமையப் போகிறதோ....?.