இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் திரைப்பட பாடகி ஆனவர் பிரகதி குருபிரசாத். தீரன் அதிகாரம் ஒன்று, பரதேசி, காதலும் கடந்து போகும், பனிதுளி உள்பட பல படங்களி பாடியுள்ளார். நண்பர்களுடன் இணைந்து பாடல் ஆல்பங்களும் பாடி வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான பிரகதி அங்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் நெருக்கமான நின்று எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் வெளிவந்தது இருவருமே அதனை தங்கள் பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டிருந்தனர்.. இருவரும் சேர்ந்து அமெரிக்கா சென்று வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் காதல், திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. இதனை பிரகதி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அசோக் செல்வன் எனது நண்பர் மட்டுமே, யாருடனும் காதலோ, திருமணமோ இப்போது இல்லை. நான் இப்போது எனது கல்லூரி படிப்பிலும், பாடல்கள் பாடுவதிலுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது காதல், கல்யாணம் பற்றி வரும் செய்திகள் எனக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. எனக்கு 20 வயதுதான் ஆகிறது. நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என்று கூறியிருக்கிறார்.