Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழர், தெலுங்கர் என பிரிப்பது அசிங்கமாக உள்ளது : விஷால்

19 மே, 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Vishal-feels-ugly-while-spliting-Tamilan-and-Telugan

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என இரண்டு பொறுப்புகளில் இருக்கிறார் நடிகர் விஷால். அவர் தேர்தலில் நின்ற சமயத்திலிருந்தே அவர் ஒரு தெலுங்கர் என்ற குற்றச்சாட்டு அவருடைய எதிராளிகளால் பரப்பப்பட்டு வந்தது.

அந்த எதிர்ப்புகளையும் மீறி அவர் அந்த பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் ஏதாவது அரசியல் செய்து அவரை அந்தப் பதவிகளிலிருந்து தூக்க வேண்டும் என்றும் சிலர் முயற்சித்தார்கள். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. அதனால், மீண்டும் அவரை ஒரு தெலுங்கர் என்று சொல்லி மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்கள்.

அதுபற்றி விஷால் நேற்று கூறிய போது, “தெலுங்கர், தமிழர் என்று பிரித்து சொல்வதெல்லாம் எனக்கு அசிங்கமாக இருக்கிறது, நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் தான் பெருமைப்படுகிறேன்,” என்று சொன்னார்.

விஷால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து இதுவரை பல படங்களைத் தயாரித்து தமிழ் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். படங்களே தயாரிக்காத சில தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டுவது எந்த நியாயம் என்றும் அவர் தரப்பில் கேட்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சென்னை தான் தென்னிந்தியா மொழிகளுக்கான தலைமையிடமாக இருந்தது. தற்போதும் பல மொழிப் படங்களின் வேலை சென்னையில் நடந்து வருகிறது. அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, தமிழ்ப் படத்தின் வேலைகள் மட்டும் இங்கு நடந்தால் மற்றவர்களின் தொழில் எப்படி நடக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலையில் தனுஷின் ஆங்கில படம் ரிலீஸ்ஜூலையில் தனுஷின் ஆங்கில படம் ரிலீஸ் ரூட்டை மாற்றுவாரா சந்தானம்? ரூட்டை மாற்றுவாரா சந்தானம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
22 மே, 2018 - 16:45 Report Abuse
Bebeto ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒன்றாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை அரசியல்வாதிகள், மதவாதிகள், இனவாதிகள், கோடு போட்டு, வேலி கட்டி, பிரித்து, இவர்கள் நம் நாட்டவர், அவர்கள் அந்நியர் என்று வேறுபாடு பார்த்து மனித இனத்தை குட்டி சுவராக்கி லாபம் அடைந்தார்கள். அது என்ன தமிழ் பெண்? இதில் இன வேறுபாடு இல்லையா? நீ தெலுங்கு ரெட்டி. ஏதாவது ஒரு உலகதில் உள்ள பெண்ணை கட்டி கொள்வது தானே? நீ தமிழ் பெண் என்று சொல்லும் போதே உன் சூது தெரிகின்றது.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19 மே, 2018 - 17:07 Report Abuse
A.George Alphonse Yes he is correct.National integration feeling is not yet come into the minds of the people of our country. The e,region,religion,sex tems are to be abolished throughout the country to achieve the feeling of "Indian" .All citizens must treat others like their own sisters and brothers to get this feeling of "Indian". In our India it is very hard and difficult to get the feeling of Indian as all politicians are encouraging the regional and religions feeling day by day for their political survival, posts and power.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in