ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் தானும் அரசியலில் குதிக்கவிருப்பது போன்ற ஒரு விஷயத்தை பரப்பினார் ஆர்.ஜே.பாலாஜி. அதை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர், ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் என்பதை யூகிக்க முடிந்தது. அந்த யூகம் தற்போது உண்மையாகிவிட்டது.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு LKG என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. கன்னடத்தில் வெளியான Humble Politiciann Nograj என்ற படத்தின் ரீ-மேக்தான் LKG என்ற தகவலும் வெளியாகியுள்ளது!
ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜியே எழுதுகிறார். பிரபு என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
தற்போதைய அரசியலை நையாண்டி செய்து உருவாகும் படம். இதனை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
பாலாஜி தொடங்கும் கட்சியின் பெயர்தான் எல்.கே.ஜி. அவர் அணிந்திருக்கும் மோதிரத்தில் நாஞ்சில் சம்பத் படம் இடம்பெற்றுள்ளது. அவர் நடிக்கிறாரா. அவரை பாலாஜி கலாய்க்கிறாரா என்று தெரியவில்லை.