ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி ரிலீஸான படம் 'இரும்புத்திரை'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தை தயாரித்த விஷாலுக்கு மட்டுமின்றி படத்தை வாங்கி வெளியிட்டவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் நடிக்க கார்த்தி முன்வந்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம் 2' படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை, தயாரிக்கிறது. ஏற்கனவே அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அப்படத்தை தொடங்குவதற்கு முன்பே இன்னொரு படத்தில் கார்த்தியுடன் இணைந்துள்ளது.
அடுத்தடுத்து கார்த்தி நடிக்கும் படங்களை இந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதா? அல்லது ரஜத்தை நீக்கிவிட்டு இந்த ப்ராஜக்ட்டுக்கு மித்ரனை இயக்குநராக கமிட் பண்ணி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின், விக்ரமை இயக்கப் போகிறார் பி.எஸ்.மித்ரன் என்று பேச்சு படத்துறையில் அடிபட்ட நிலையில், கார்த்தியை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.