கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஆந்திராவில் உள்ள ரஜினி ரசிகர்கள், அவரது 'காலா' படம் கடந்த ஏப்ரல்-27ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்த்தனர்.. ஆனால் தமிழ் திரையுலகில் நிலவிய வேலைநிறுத்தத்தால் 'காலா' ரிலீஸ் தள்ளிப்போனதில் அங்கிருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே. ஆனால் இனி எந்த மாற்றமும் இன்றி வரும் ஜூன்-7ஆம் தேதி 'காலா' வெளியாக இருக்கிறது..
இதையடுத்து தெலுங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 'காலா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை ஆந்திராவில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். 'காலா' பட புரமோஷன்களில் ஒருபகுதியான இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்துகொண்டு தெலுங்கு ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்விக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.