Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்

18 மே, 2018 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Sridevi-death-not-an-accident,-its-a-planned-murder-:-says-Ex-Cop

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இயக்குனர் சுனில் சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது.

இந்த நிலையில், டில்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். தற்போது இவர் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், துபாய் தடவியல் போலீஸின் தடவியல் அறிக்கை திருப்திகரமாக இல்லை. அதோடு ஸ்ரீதேவி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரணைக்காக நாங்கள் சென்றபோது அவர்கள் ஸ்ரீதேவி தங்கியிருந்த அறைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை.

அதையடுத்து பக்கத்து அறையில் தங்கியிருந்து அவரது மரணம் குறித்து நாங்கள் விசாரித்தபோது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் அதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை கமிஷனர் இந்த குற்றச்சாட்டு ஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்அன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் ... டாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் டாப்சி படத்தில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

20 மே, 2018 - 12:14 Report Abuse
ArulKrish late news
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 மே, 2018 - 10:51 Report Abuse
Sridhar கொலை தான். ஆனால் அதை துப்பறிந்து உண்மையை வெளிக்கொண்டு வர யாருக்கு திராணி இருக்கு? அவருடைய உறவினர்களே கவலைப்படாத போது கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது என்று விடவேண்டியதுதான்
Rate this:
19 மே, 2018 - 04:07 Report Abuse
ArulKrish All knows thats...
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
18 மே, 2018 - 16:49 Report Abuse
BoochiMarunthu பெண்கள் மது குடித்தால், அந்த பெண்ணை கொலை செய்தால் கூட ஆதரிக்கும் கூட்டம் தான் அரபியர்கள் . அதனால அந்த போலீஸ் கொலையை நியாயம் செய்ய வாய்ப்பு உள்ளது . ஒரு பெண் கற்பழிப்பு என்று புகார் செய்தால் அந்த பெண்ணையே கைது செய்வார்கள் .
Rate this:
Anand - chennai,இந்தியா
18 மே, 2018 - 16:48 Report Abuse
Anand நாட்டுக்கு மிகவும் முக்கியம், துப்பறிகிறார்களாம்,... துப்புக்கெட்ட இந்த துப்பறிவாளர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in