Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணனுக்காக நடனம் ஆடிய யுவன்

18 மே, 2018 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Yuvan-dance-for-his-brother

இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரிகிருஷ்ணன் பாஸ்கர் நடிக்கும் படம் பேய்பசி. நமிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன், விபின் உள்பட பலர் நடிக்கிறார்கள். சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு படங்களின் கதை இலாகாவில் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்குகிறார்.

ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு அண்ணனுக்காக இசை அமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதோடு ஒரு பாடலுக்கு ஆடவும் செய்திருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் கூறியதாவது:

இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம்.

பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது படத்துக்கு மிக பெரிய பலம் என்றார் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.100 கோடி பட்ஜெட்டில் வீரமாதேவிரூ.100 கோடி பட்ஜெட்டில் வீரமாதேவி பிக்பாஸ் 2-வில் பங்கேற்பது யார்? யார்? பிக்பாஸ் 2-வில் பங்கேற்பது யார்? யார்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Karthik TVR - Tiruvarur,இந்தியா
19 மே, 2018 - 11:19 Report Abuse
Karthik TVR சொல்லிட்டாரு இசை மேதை டேய் நீ எல்லாம் எப்படி டா வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்க ?
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
18 மே, 2018 - 16:21 Report Abuse
KayD ராஜா thooki போட்ட தான் யுவன் ku tune வரும்.. இல்லைனா instruments automatic aa vaasichaa தான் உண்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in