ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரிகிருஷ்ணன் பாஸ்கர் நடிக்கும் படம் பேய்பசி. நமிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன், விபின் உள்பட பலர் நடிக்கிறார்கள். சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு படங்களின் கதை இலாகாவில் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்குகிறார்.
ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு அண்ணனுக்காக இசை அமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதோடு ஒரு பாடலுக்கு ஆடவும் செய்திருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் கூறியதாவது:
இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம்.
பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது படத்துக்கு மிக பெரிய பலம் என்றார் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.