ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூப்பர் மேன் படங்கள் வெளிவந்த புதிதில் அதில் சூப்பர் மேனுக்கு ஜோடியாக நடித்தவர் மார்க்கெட் கிட்டர். 1968-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த மார்க்கெட். 1978ல் வெளிவந்த முதல் சூப்பர்மேன் படத்தில் நடித்தது மூலம் உலக புகழ்பெற்றார். அதன் பிறகு வந்த சூப்பர் மேன் படங்களின் பல பாகங்களிலும் மார்க்கெட் நடித்தார்.
வயதானதும் குணசித்திர வேடங்களில் குறிப்பாக வயதான கேரக்டர்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த த நெய்பர்ஹூட் என்ற படம்தான் அவர் நடித்த கடைசி படம். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
70 வயதை நெருங்கிய மார்கெட்டிற்கு முதுமை காரணமாக பலவித நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சூப்பர்மேன் ரசிகர்கள் இணைய தளங்களில் தங்கள் அனுதாபத்தை பதிவிட்டு வருகிறார்கள்.