'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் "ஒரு குப்பை கதை". ஹீரோயினாக மனீஷா யாதவ் நடித்திருக்கிறார். காளி ரங்கசாமி இயக்கி இருக்கிறார். அஸ்லம் தயாரித்திருக்கிறார். ஜோஸ்வா ஸ்ரீதர், தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளனர். இந்தப் படத்தை ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. விஜய் நடித்த குருவி தான் முதல் படம். இந்த 10 ஆண்டுகளில் வெற்றிப் படம், சுமாரான படம், மட்டமான படம் என கலந்து கொடுத்திருக்கிறோம். சில சூப்பரான படங்கள் அமைந்து கம்பெனியை தாங்கி பிடிக்கும். அப்படியான ஒரு படம் இது. மைனா படம் ஏற்படுத்திய பாதிப்பை இந்தப் படம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
தப்பான படங்கள் வெளிவரும்போது கடுமையாக விமர்சிக்கிறார்கள். கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். அதை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். அதேமாதிரி நல்ல படங்கள் வரும்போது வரவேற்பு கொடுப்பதில்லை, பாராட்டுவதில்லை. அதனால் எங்களுக்கு கோபம் வருகிறது. நல்ல படங்களை எதற்கு எடுக்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை பாராட்டுங்கள், வரவேற்பு கொடுங்கள். என்றார்.