ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இறுதிசுற்று படத்தின் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர், இயக்குனர் சுதா கொங்கரா. இதையடுத்து இறுதிசுற்று 2வை இயக்குகிறார், விஜய் சேதுபதியை இயக்குகிறார், சிவகார்த்திகேயனை இயக்குகிறார் என செய்திகள் வந்தன.
ஆனால் அவர் அடுத்து இயக்குவது சூர்யா நடிக்கும் படத்தை. சூர்யாவுக்கான கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். படத்திற்கு இசை அமைப்பது ஜி.வி.பிரகாஷ். நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் நடிக்காத படம் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
தற்போது செல்வராகவன் படம், கே.வி.ஆனந்த் படங்களில் நடிக்கும் சூர்யா, அதை முடித்து விட்டு, சுதாவின் படத்தில் நடிக்கிறார். படத்தை தயாரிப்பது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்.
சூர்யா வருகிற வரைக்கும் காத்திருக்க வேண்டாம் என்று பாடல் இசை அமைக்கும் பணியியில் பிசியாகிவிட்டார் சுதா. அவர் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து தற்போது படத்திற்கான பாடல்களை உருவாக்கி வருகிறார்.