மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
திருமணத்திற்குப் பிறகு ஒரு நடிகைக்கு இவ்வளவு சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்குமா என ஆச்சரியத்தில் ரசிகர்களையும், பொறாமையும் மற்ற நடிகைகளையும் ஆழ்த்தியிருக்கிறார் சமந்தா. 2017ம் ஆண்டில் சமந்தா தமிழப் படமான மெர்சல் படத்திலும், தெலுங்குப் படமான ராஜு காரி கதி 2 படத்திலும் நடித்தார். இதில் மெர்சல் படம் மட்டுமே வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த 2018ம் ஆண்டில் சமந்தா நடித்து தெலுங்கில் வெளிவந்த ரங்கஸ்தலம் படம் சூப்பர்ஹிட் ஆகியது. 200 கோடி வசூலை அந்தப் படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு சமந்தா நடித்த மற்றொரு தெலுங்குப் படமான மகாநதி படமும், நேற்று இரும்புத்திரை தமிழ்ப் படமும் வெளியானது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து ஹிட் படங்கள் என்பதால் சமந்தாவின் மார்க்கெட் மேலும் உயரவே வாய்ப்புள்ளது. அவர் தற்போது சீமராஜா தமிழ்ப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் யு டர்ன் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
மேலும் சில புதுப்பட வாய்ப்புகள் சமந்தாவைத் தேடி வரும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிப் பயணம் அடுத்த வருடமும் தொடரவே வாய்ப்புகள் அதிகம்.