மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தியாவில் கடந்த ஆண்டில் மிகப் பெரும் வசூலைப் புரிந்த 'பாகுபலி 2' படம் மே 4ம் தேதி சீனாவில் வெளியானது. அங்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கடந்த இரண்டு நாட்களாக 'பாகுபலி 2' படத்தையும், 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தையும் வைத்து சில மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பிரபலமாகி வருகின்றன.
இரண்டு படங்களின் கதாபாத்திரங்களையும் ஒரே போஸ்டரில் டிசைன் செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கொஞ்சம் பரபரப்பை உருவாக்கிவிட்டார்கள். 'பாகுபலி 2' படம் சீனாவில் தவறான சமயத்தில் வெளியாகிவிட்டது என்றே பலரும் கருதுகிறார்கள்.
உலக அளவில் பல ஆயிரம் கோடி வசூல் சாதனை புரியும் படமான 'அவெஞ்சர் இன்பினிட்டி வார்' படம் வெளிவந்த சமயத்தில் 'பாகுபலி 2' படத்தை சீனாவில் வெளியிட்டிருக்கவே கூடாது என்கிறார்கள். அதனால்தான் 'பாகுபலி 2' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கிறார்கள்.
இருப்பினும் இந்த மீம்ஸ்களால் படத்திற்கு மேலும் விளம்பரம் கொடுத்து சில கோடிகளை கூடுதலாக வசூலித்தால் படத்தை வெளியிட்டவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.