ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை. அவரைத் தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து தைரியமாக பேசத் தொடங்கினார்கள். இந்நிலையில், காலா பட நாயகியான ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது தனக்கு ஏற்பட்ட செக்ஸ் டார்ச்சர் குறித்து வெளியிட்டுள்ளார்.
அதில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலுமே உள்ளது. இந்தியாவில் இதுகுறித்து யாராவது பெண்கள் தைரியமாக வெளியில் சொன்னால் அவர்களுக்கு கெட்டப்பெயரை உருவாக்கி விடுகிறார்கள்.
இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்களை நானும் சந்தித்துள்ளேன். பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியில் சொல்லும் பெண்களுக்கு மற்றவர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் இமேஜை டேமேஜ் செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஹூமா.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி. ஹிந்தியில் நான் நடித்த கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தைப் பார்த்து விட்டு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.