திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி, பிக்பாஸ் மூலம் அந்த பெயரை கெடுத்து கொண்டார் என்பதே உண்மை. ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாகி உள்ளார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் இவர், அனிதாவின் வாழ்க்கை படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டுவிட்டரில் அவர் போட்ட வீடியோ ஒன்று, என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என வலைதள வாசிகள் கிண்டல் செய்யும் அளவுக்கு வைரலாகி உள்ளது.
ஜூலி ஒரு காரில் இருந்து இறங்கி, "ரஜினி அரசியலுக்கு வருவாரா.? மாட்டாரா? கமல் ஆட்சியை பிடிப்பாரா? மாட்டாரா? ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் என்ன செய்வார். இவர்கள் செய்யும் கூத்து தாங்க முடியல, நம் மக்களுக்கு யார் நல்லது செய்வாங்க. நானும் துவங்க போகிறேன் ஒரு அரசியல் கட்சி. விரைவில் அறிவிக்க போகிறேன். காத்திருங்கள் ஒன்று சேருவோம், வெல்வோம்” என பேசியிருக்கிறார்.
இதை பார்த்த சமூக வலைதளவாதிகள், "என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை, ரஜினி, கமல், RJ பாலாஜி வரிசையில் முதலமைச்சர் போட்டியில் குதித்தார் வீரத் தமிழச்சி ஜூலி.. இன்னும் வாழ்க்கையில் என்ன கொடுமை எல்லாம் பார்க்கணுமோ" என ஜூலியை கிண்டல் செய்து வருகின்றனர்.