டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிகிறது.
மோகன்லாலை பொறுத்தவரை இளம் நடிகர்கள் படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிப்பதற்கு தயங்காதவர். சில ஆண்டுளுக்கு முன் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் மோகன்லால். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் கூட ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெற்றது.
அதேபோல இயக்குனர் கே.வி.ஆனந்தும் தனது படங்களில் பிரபு, கார்த்திக், டி.ராஜேந்தர் என சீனியர் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார், இப்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மோகன்லாலை இந்தப்படம் மூலம் தமிழுக்கு அழைத்து வருவதால் அவரது கேரக்டரும் மாஸ் ஆகவே இருக்கும் என நம்பலாம்.