ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. இந்த படம் தெலுங்கில் காசி என்ற பெயரில் வெளியாகிறது.
பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி தமிழுக்கு இணையாக அப்படம் வசூலித்தது.
ஆனால் அதன்பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மூன்று படங்கள் தோல்வியை தழுவின. இதனால் காளி படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
தெலுங்கில் தற்போது பிரபலமாக இருக்கும் அஞ்சலி இப்படத்தில் நாயகியாக நடித்திருப்பதால் தமிழைப்போலவே காளி படத்திற்கு தெலுங்கிலும் நல்லதொரு ஓப்பனிங் கிடைக்கும் என்று அதிகப்படியான தியேட்டர்களில் காசி படத்தை வெளியிடுகிறார்கள்.
காளி படம் மே 18-ம் தேதி ரிலீஸாகிறது.