பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள படம் அண்டாவ காணோம். சி.வேல்மதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சார்பில் சதீஷ்குமார் தயாரித்துள்ளார். ஒரு வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்ட இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் படம் அடுத்த மாதம் 29ந் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவது தான். என் தயாரிப்பில் , அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்டாவ காணோம்" என் கூற்றை நிரூபிக்கும். என்கிறார் ஜே எஸ் கே.