ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு இசையமைப்பாளர் இமான்-ஐ அழைத்துள்ளார் அஜித்.
இமானும் சென்னையிலிருந்து ஐதராபாத் சென்று படப்பிடிப்பைப் பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி இமான் கூறியிருப்பதாவது, “என்னுடைய பாடல்களின் படப்பிடிப்பைப் பார்ப்பது எப்போதாவது தான் நடக்கும். 'விஸ்வாசம்' படப்பிடிப்பில் என்னுடைய பாடல்களுக்கு எளிமையின் மனிதன் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. என்னை அழைத்ததற்கு நன்றி அஜித் சார்,” என அவர் டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இமான் திரையுகத்தில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்போதுதான் முதல் முறையாக அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.