சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தில் நடிப்பதற்கு முன்பே பல விமர்சனங்களை சந்தித்தார் கீர்த்தி சுரேஷ். ஆனபோதும், இந்த விமர்சனங்களையெல்லாம் பாராட்டுக்களாக மாற்றுவேன் என்று சாவித்ரியாக மாறி நடித்தார்.
மேலும், இந்த நடிகையர் திலகம் படம் சாவித்ரியின் 14 வயது முதல் 40 வயது வரையிலான கதையில் உருவாகியுள்ளது. குறிப்பாக அவரது சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையே இந்த படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
அதனால் படத்தில் சொல்லப்பட்டுள்ள விசயங்கள் கண்டிப்பாக படம் வெளியாகும்போது விமர்சனங்களை சந்திக்கும் என்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே விமர்சனங்களை சந்தித்த நான், படம் வெளியாகும்போது வரும் விமர்சனங்களை சந்திக்கவும் தயாராகிவிட்டேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.