டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விவேகம் படத்தில் "வெறியேற..." வேலையில்லா பட்டதாரி படத்தில் "இறைவனாய் தந்த இறைவியே..." தாரை தப்பட்டை படத்தில் "ஆட்டக்காரி மாமன் பொண்ணு..." பாடல்கள் உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் பின்னணி பாடியிருப்பவர் பாடகி மானசி.
தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்பட பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார். தமன்னா, சமந்தாவுக்கு நெருங்கிய தோழியாகவும் இருக்கிறார்.
மானசிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் அபினேஷ் விஜயகுமாருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். நடிகை தமன்னா, நிக்கி கல்ராணி, சமந்தா உள்ளிட்ட நடிகைகளும், திரைப்பட பின்னணி பாடகர், பாடகிகளும் கலந்து கொண்டனர்.