இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்" படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி உள்ள படம் டிக் டிக் டிக். மிருதன் படத்தை அடுத்து ஜெயம் ரவியுடன் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ள இந்தப் படம், இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படம், ரிலீஸ்க்கு தயாராகி பல மாதங்களாகிவிட்டன. படத்தின் டீசர், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து ஏற்பட்ட பல குழப்பங்களால் ரிலீஸ் தேதி இரண்டு - மூன்று முறை தள்ளிப்போனது.
இந்நிலையில் வருகிற ஜூன் 22-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்க ரிலீஸ் குழுவிடம் பேசி ஒப்புதல் வாங்கி உள்ளனர்.
ரஜினியின் காலா படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து டிக் டிக் டிக் படம் வெளியாக இருக்கிறது.