மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் அசோக் செல்வன் கடைசியாக நடித்த 'கூட்டத்தில் ஒருத்தன்' படம் படு தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவான 'சில சமயங்களில்' படத்தை பிசினஸ் செய்ய முடியாததால் நேரடியாக டிஜிட்டலில்... அதாவது நெட்பிளிக்ஸில் வெளியானது. பிரியதர்சன் இயக்கிய இப்படம் மே-1ஆம் தேதி நேரடியாக டிஜிட்டலில் வெளியானது.
இப்போது 'ஆக்சிஜன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் அசோக். 'மெட்ரோ' படத்தை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இதுதவிர லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 'ஹவுஸ் ஓனர்' படத்தில் நடிக்க இருக்கிறார் அசோக் செல்வன். அடுத்து அறிமுக இயக்குனர் வில்வா கிரிஷ் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.