ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்களும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது சண்டை காட்சிக்காக துபாயில் முகாமிட்டுள்ளனர்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்தது குறித்து நீல் நிதின் முகேஷ் விடுத்துள்ள ஒரு செய்தியில், பிரபாஸ் ஸ்டைலிசான கெட்டப்பில் நடிக்கிறார். ஸ்பாட்டில் அனைவரிடமும் மிக எளிமையாக பழகுவார். அதனால் அனைவருக்குமே அவர் மீது அன்பு அதிகரித்துள்ளது. நான் அவரை டார்லிங் என்று தான் அழைக்கிறேன். பிரபாஸின் நடிப்புக்கு நான் பெரிய ரசிகராகி விட்டேன் என்கிறார் நீல் நிதின் முகேஷ்.