ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பிறகு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கிறது. கமல் கட்சி தொடங்கிவிட்டதை அடுத்து, ரஜினியும் கட்சி தொடங்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
கமல் அரசியலுக்கு வரப்போவதாக டுவிட்டரில் தெரிவித்தபோது, அவரது அண்ணனான சாருஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, ரஜினியிடம் தலைவருக்குரிய தகுதி உள்ளது, கமலிடம் அது இல்லை என்றும் சொன்னார். ஆனபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார் கமல்.
இந்த நேரத்தில் தற்போது தனது பேஸ்புக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் சாருஹாசன். அதில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் தான். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் என்று முட்டாள் என்று கூறலாம். இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்ளவேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சாருஹாசனின் இந்த கருத்து ரஜினி, கமல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.