'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மைனா, சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ அடுத்து தயாரிக்கும் படம் கா. இது ஹாலிவுட் படங்களின் பாணியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உருவாகும் ஆக்ஷன் படம். இதில் ஆண்ட்ரியா காட்டில் வன விலங்குகளை படம் எடுக்கும் வைட் லைப் போட்டோகிராபராக நடிக்கிறார். இவர் தவிர இளவரசு, சலீம் கவுஸ் நடிக்கிறார்கள். நாஞ்சில் என்ற புதுமுகம் இயக்குகிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் நாஞ்சில் கூறியதாவது:
கதாநாயகியை முன்னிலைப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் . கா என்றால் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்துள்ளோம். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. என்கிறார் நாஞ்சில்.