ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஹரஹர மகாதேவகி' என்ற ஆபாசப் படத்தை எடுத்த ஆபாச இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் அடுத்து அதைவிட மோசமான ஒரு ஆபாசப் படமாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை எடுத்திருக்கிறார் என படம் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மற்ற படங்கள் தியேட்டர்கள் கிடைப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்க இந்த ஆபாசப் படத்தை வாங்கித் திரையிட பல தியேட்டர்காரர்கள் தயாராக இருக்கிறார்களாம். விடுமுறைக் காலம் என்பதால் படத்தை நோக்கி இளைஞர்கள் வருவார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இதனிடையே, இந்தப் படத்தின் 'ஸ்னீக் பீக்' என ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் ஆபாசமாக உள்ள அந்தக் காட்சி இந்தப் படம் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அந்தக் காட்சியைப் பார்த்த பலரும் ஒரு நிமிடக் காட்சியே இப்படி இருக்கிறதென்றால் படம் எப்படியிருக்கும் என கேள்வியை எழுப்புகிறார்கள். இந்தப் படத்திற்கு சென்சார் எப்படி அனுமதி அளித்தது என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
இந்த விடுமுறையில் உங்கள் வீட்டு இளைஞர்கள் இந்தப் படம் பார்க்கச் செல்கிறார்களா என்று பெற்றோர்கள் கவனமாகப் பார்ப்பது நல்லது. இந்த மாதிரியான படங்கள்தான் இளைஞர்களை தவறான வழியில் இட்டுச் செல்லும்.