தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் காலா. மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதாவின் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.
ரஜினியுடன் ஹிந்தி பிரபலங்கள் ஹூமா குரேஷி, நானா படேகர் ஆகியோருடன் சமுத்திரகனி, அருள்தாஸ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.
ஜூன் 7-ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில், மே 9-ம் தேதி காலா படத்தின் இசை வெளியாகும் என 2 நாட்களுக்கு முன் தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் நாளை (மே 1) இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் இன்று அறிவித்துள்ளார். இதனை அவரது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.