தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படம் மாஸ்டர் பீஸ். அவருடன் வரலட்சுமி, பூனம் பாஜ்வா, மகிமா நம்பியார், உன்னி முகுந்தன், முகேஷ், உள்பட பலர் நடித்திருந்தார்கள். தீபக் தேவ் இசை அமைத்திருந்தார், வினோத் இளம்பள்ளி ஒளிப்பதிவு செய்திருந்தார், அஜய் வாசுதேவ் இயக்கி இருந்தர். ராயல் சினிமா சார்பில் சி.எச்.முகமது தயாரித்திருந்தார்.
இது ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. ஒரு கொலை நடக்கும் அந்த கொலையை செய்தது ஆசிரியர் மம்முட்டியா, அல்லது அவரிடம் படிக்கும் மாணவர்களா என்பது சந்தேக நிழல். அதை துப்பறிந்த கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரி வரலட்சுமி. இந்த கதையின் இடையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையிலான நட்பும், இருவரும் நினைத்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்கலாம் என்கிற மெசேஜும் சொல்கிற படம்.
இந்த படம் இப்போது பேராசிரியர் சாணக்யன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. மம்முட்டி தற்போது பேரன்பு என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.