விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
தமிழ்த் திரையுலகத்தில் 80களுக்குப் பிறகு ரஜினிகாந்த் கால்ஷீட் யாருக்கு கிடைக்கிறதோ அவர் கோடீஸ்வரர் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தங்களுக்கு ரஜினிகாந்த் கால்ஷீட் தர மாட்டாரா என காத்துக் கிடப்பார்கள்.
முன்னணி நிறுவனங்கள் கூட அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என முயற்சித்து காத்துக் கிடந்திருக்கிறார்கள். சில பெரிய நிறுவனங்களுக்கு ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
ரஜினிகாந்த் அவருடைய மருமகன் தனுஷுக்காக நடித்துக் கொடுத்த 'காலா' படம் தயாரிப்புச் செலவையும் மீறி வெளியீட்டிற்கு முன்பாக, நன்றாகவே லாபம் சம்பாதித்துக் கொடுத்து வருகிறது. சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'காலா' படத்தை லைக்கா நிறுவனம் 100 கோடி கொடுத்து வினியோக உரிமை வாங்கியதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சாட்டிலைட் டிவி உரிமையும் சுமார் 75 கோடி போயிருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் டிஜிட்டல் உரிமம், இன்னும் பிற உரிமைகள் என அதுவும் பல கோடி தேறும். மொத்தத்தில் 'டபுள் பிராபிட்' ஆக இப்போதே தயாரிப்பாளர் தனுஷுக்கு ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்துவிட்டது என்றும் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.
400 கோடி ரூபாய் செலிவில் தயாரிக்கப்படும் '2.0' படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு தான் விற்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ரூ.75 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் 'காலா' சாட்டிலைட் உரிமை 75 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறதா என பலரும் ஆச்சரியத்தில் திளைத்துப் போயிருக்கிறார்கள்.