Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

25 ஏப், 2018 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Singer-MS.Rajeswari-pasess-away

பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, (வயது 87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

இவரது இயற்பெயர் மதுரை சடகோபன் ராஜேஸ்வரி. 1932-ம் ஆண்டு பிப்., 24-ம் தேதி சென்னையில், சடகோபன் - ராஜசுந்தரி தம்பதியரின் மகளாக பிறந்தார். அம்மா அந்தக்கால நாடக நடிகை, இவரது பாட்டி கண்ணாமணியம்மாளும், அப்போது கர்நாடக பின்னணி பாடகியாக இருந்தார்.

சின்ன வயதில் இருந்தே ராஜேஸ்வரிக்கு பாடுவதில் ஆர்வம் அதிகம். முதன்முதலில் ஸ்டார் கம்பென்ஸ் நிறுவனத்தில் பி.ஆர்.பந்தலுவின் அறிமுகத்தால் அங்கு வேலைக்கு சேர்ந்தார். 1946-ல் விஜயலட்சுமி என்ற படத்தில் சினிமா வாய்ப்பு வந்தது. கோவிந்தராஜூலு நாயுடுவின் இசையில் "மையல் மிகவும் மீறுதே..." என்ற பாடலை பாடி, 12வயதில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

பின்னர் "சம்சாரம் நெளவுகா" என்ற படத்தில் ஒரு பாடல் பாடினார். 1948-ல் "ராஜமுக்தி" படத்தில் தியாகராஜ பாகதவருடன், "கண்வழி நுழைந்து என் உள்ளம் கவர்ந்த..." என்ற பாடலை அவருடன் இணைந்து பாடினார். ஆனால் இந்தப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

தொடர்ந்து, ஏவிஎம் நிறுவனம் தயாரித்த, "நாம் இருவர்" படத்தில் "மகான் காந்தி மகான்" என்ற பாடல், இவரை பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக்கியது. தொடர்ந்து ஏவிஎம்., நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்டூடியோ பாடகியாகவே இருந்தார்.

குழந்தைக்குரலுக்கு சொந்தக்காரர் என்றால் அது ராஜேஸ்வரி தான். கமலின் முதல்படமான "களத்தூர் கண்ணம்மா"வில் அவர் பாடும், "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" குரல் ராஜேஸ்வரி உடையது.

"சுண்டலிக்கும் சுண்டலிக்கும் திருமணமாம், மியா மியா பூனைக்குட்டி, கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே, பாப்பா பாடும் பாட்டு..." என பல மழலை குரல்களுக்கு இவர் தான் சொந்தக்காரர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500 பாடல்கள் வரை பாடியிருக்கிறார்.

ஆர்.சுதர்சனம் தொடங்கி, கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.

ஏவி.மெய்யப்பன் தொடங்கி பா.நீலகண்டன், எம்.வி.ராமன், சோமு, பீம்சிங், பி.ஆர்.பந்தலு, கேவி.ஸ்ரீனிவாசன், மணிரத்னம், ராமநாதன் வரை பல இயக்குநர்களின் படங்களில் பாடியிருக்கிறார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு வெங்கடேசன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகள் ஆர்த்தியும் இளம் பின்னணி பாடகியாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து, சமீபத்தில் அகால மரணம் அடைந்த துக்கமும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு இருந்தது.

ராஜேஸ்வரியின் இறுதி சடங்கு நாளை(ஏப்., 26) மாலை 4.30 மணிக்கு குரோம்பேட்டை மயானத்தில் நடைபெற உள்ளது.

ராஜேஸ்வரி பாடிய பிரபலமான பாடல்கள்...

நாம் இருவர் - மகான் காந்தி மகான்

டவுன் பஸ் - சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...

தை பிறந்தால் வழி பிறக்கும் - மண்ணுக்கு மரம் பாரமா மரத்திற்கு கிளை பாரமா

படிக்காத மேதை - படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு...

பராசக்தி - ஓ ரசிக்கும் சீமானே...

பராசக்தி - புது பெண்ணின் மனதை தொட்டு போறவறே...

களத்தூர் கண்ணம்மா - அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

மகாதேவி - காக்கா காக்கா மை கொண்டா...

கைதி கண்ணாயிரம் - சுண்டலிக்கும் சுண்டலிக்கும் திருமணமாம்...

தெய்வீக உறவு - சிந்தாமல் சிரிப்பாள் இவ சிங்கார பாப்பா...

மாலையிட்ட மங்கை - மழை கூட ஒருநாள் தேன் ஆகலாம்...

குமுதம் - மியாவ் மியாவ் பூனைக்குட்டி

இரு வல்லவர்கள் - குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேட்பா...

நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாடகியான சிவகுமாரின் மகள்பாடகியான சிவகுமாரின் மகள் தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

suresh - chennai,இந்தியா
25 ஏப், 2018 - 19:41 Report Abuse
suresh "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" ,,,இந்த பாடல் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் ஆதரவற்றோர் பள்ளியில் ஓர் சிறுவன் பாடுவதாக அமைந்த பாடல்,,,,அதில் ஒரு வரி..."தந்தை முகம் தாயின் முகம் கண்டெறியுமோ " என வரும்...அந்த வரிக்கு அந்த சிறுவனின் ஏக்கங்களுக்கு தன் குரலால் உயிரூட்டி இருப்பார் மறைந்த பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி ....எழுத்துக்கள் பாடல்களுக்கு அடித்தளமிடுகின்றன,,,அந்த பாடல்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் உயிரூட்டிய பாடகியே,,,உங்கள் உயிர் பிரிந்தாலும்...உங்களின் குரல் எங்களை விட்டு என்றும் பிரியாது .
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 ஏப், 2018 - 19:40 Report Abuse
Bhaskaran பிற்கால இசுயமைப்பாளர்கள் இவரை பயன்படுத்த தெரியவில்லையென்பதே வருத்தமளிக்கும் செய்தியாகும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in