ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
மலையாளத்தில் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படம், தமிழில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீ-மேக்காகி உள்ளது. அரவிந்த்சாமி, அமலாபால் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஏற்கனவே இரண்டு - மூன்று முறை படம் தள்ளிப்போனது.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நிலவியதால் படம் மேலும் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்தவாரம் ஸ்டிரைக் முடிந்த நிலையில் இந்தவாரம் ஏப்., 27-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடைசிநேரத்தில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது. படத்தை மே 11-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். போதிய தியேட்டர் கிடைக்காத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.