இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் 'வர்மா'. இப்படத்தை பாலா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாளம் நாட்டில் ஆரம்பமானது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி குழுவினர் சென்னை திரும்பினர்.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பும் நின்றது. இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.
தெலுங்கில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தைத்தான் ரீமேக் செய்து வருகிறார்கள். இதுவரை ரீமேக் படங்களை இயக்காத பாலா, நடிகர் விக்ரம் கேட்டுக் கொண்டதால் ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார். இப்படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
ஹீரோயினைத் தேர்வு செய்துவிட்டார்களா இல்லை என்பது பற்றியும் கூட தெரிவிக்கவில்லை. படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதையும் இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.