டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த இரண்டு மதங்களுக்கு முன் வெளியான மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலில், தனது புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் தான் புருவ அழகி எனப்படும் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த பாடலில் இவருடன் சரிக்கு சமமாக புருவம் உயர்த்திய நாயகன் ரோஷன்
ப்ரியா வாரியர் புகழ்பெற்ற அளவுக்கு இல்லையென்றாலும் அதில் பாதி அளவுக்காவது ரசிகர்களை கவர்ந்த ரோஷன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது நண்பனுக்கு பிறந்தநாள் பரிசாக புருவ அழகி என்ன பரிசளித்திருந்தார் தெரியுமா..?.
தாங்கள் இருவரும் சமீபத்தில் துபாயில் கலந்துகொண்ட நிகழ்சியின்போது எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பிரியா வாரியர், “என்னுடைய நெருங்கிய நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள. நான் எதுவும் சொல்ல தேவையில்லை.. ஏனென்றால் உனக்கு எல்லாமே தெரியும்.. ஆசீர்வதிக்கப்பட்டவனாக இரு” என வாழ்த்தியுள்ளார்.