பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்' படங்களைத் தொடர்ந்து 'டி.கே' இயக்கும் படம் - 'காட்டேரி'. இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. திரைத்துறையின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்ட படம் இது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வைபவ் நடிக்கும் திரில்லர் படம் இது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல மாதங்களுக்கு முன்பே பெரும் தொகையை அட்வான்ஸாக வாங்கிய ஓவியா நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் என்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விலகிவிட்டார். அந்தக் கதாபாத்திரத்தில் சோனம் பாஜ்வா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே வைபவ் நடித்த 'கப்பல்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
'கப்பல்' படத்தை தொடர்ந்து பஞ்சாபி, இந்திப் படங்களில் கவனம் செலுத்திவந்த நிலையில், தற்போது 'காட்டேரி' படத்தில் நடிக்கிறார். இவரை சிபாரிசு செய்தவர் வைபவ். காட்டேரி படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.