பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, காட்டேரி என்ற படத்தை தயாரிக்கிறார். 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இப்படத்தை இயக்குகிறார். 'காட்டேரி' படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு 'யாமிருக்க பயமே' படத்திற்கு இசை அமைத்த எஸ்.என்.பிரசாத இசை அமைக்கிறார்.
காட்டேரி படத்தில் வரலட்சுமி சரத்குமார், 'மீசையை முறுக்கு' படப் புகழ் ஆத்மிகா, 'கப்பல்' படப் புகழ் சோனம் பஜ்வா, தெலுங்கு நடிகை மனாலி ரத்தோட் என 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
காட்டேரி படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு இரவிலேயே நடக்க இருக்கிறது.