இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் மாரி 2. இப்படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தத்திற்குப் பிறகு இன்று(ஏப்., 23) முதல் மீண்டும் சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. ஏற்கெனவே, இப்படத்தின 50 சதவீத படப்பிடிப்பு வேலை நிறுத்தத்திற்கு முன்பாக முடிந்துவிட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இணையும் இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ், யுவன் மீண்டும் இணைந்திருப்பது அதற்கு முக்கியமான ஒரு காரணம். மாரி படத்தின் முதல் பாகத்தின் பாடல்கள் தனுஷுக்கு மிகப் பெரிய ஹிட்டாக அமைந்தது. அதை மீறும் வகையில் இப்படத்தின் பாடல்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக முதல் முறையாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த புதிய ஜோடியும் நிறையவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ், சாய் பல்லவி இருவருமே அவர்களது யதார்த்த நடிப்பால் சேப்படுபவர்கள். மாரி 2 படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.