இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. தமிழில் கப்பல் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகாததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பஞ்சாபி படங்களுக்கே திரும்பி விட்டார். தற்போது பஞ்சாபி படங்களுடன் ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் டி.கே. யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களுக்கு பிறகு அவர் இயக்கும் காட்டேரி படத்தில் சோனம் பாஜ்வா தான் நாயகி. இதில் முதலில் நடிப்பதாக இருந்த ஓவியா கால்ஷீட் விஷயத்தில் சொதப்பியதால் சோனம் பாஜ்வாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
அவருடன் வரலட்சுமியும் நடிக்கிறார். வைபவ் ஹீரோ. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம். தயாரிப்பாளருக்கு வந்த சில பிரச்னைகள், சினிமா வேலை நிறுத்தம் இவற்றால் தாமதமாகி இப்போது முழுவீச்சில் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள்.