மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கி உள்ள "கண்ணே கலைமானே" படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது திரையுலக வேலை நிறுத்தம் அமுலில் இருப்பதால் தந்தையுடன் அரசியல் பணியில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈநாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. காமெடி கலந்த காதல் கதை. இதில் உதயநிதியின் தந்தையாக கார்த்திக் நடிக்கிறார். ஜோடியாக மேயாதமான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் நடிக்கிறார்கள்.
ஒரே படத்தில் அறிமுமான இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடிக்க துவங்கி உள்ளனர். தற்போது, மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.