இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'கண்ணே கலைமானே' என்ற படத்தை இயக்கியுள்ள சீனுராமசாமி அடுத்து சமுத்திரக்கனியுடன் இணைகிறார். 'கண்ணே கலைமானே' படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விரைவில் வெளியாகும் இந்த படத்தை தொடர்ந்து சீனுராமசாமி தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார். சீனுராமசாமி அடுத்து இயக்கும் படத்தில் சமுத்தரக்கனி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
'விரைவில் சகோதரர் சமுத்திரகனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது ' என்று இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த படம் சமூகத்துக்கு அவசியமான கருத்துக்களை சொல்லும் படமாக இருக்குமாம்.
ஒரு படத்தை முடித்த பிறகு அடுத்தப்பட வாய்ப்பு வராமல் காலவிரயம் ஏற்படுவதால், ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார் சீனுராமசாமி.