Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயப் பின்னணியில் அதிக படங்கள்!

16 ஏப், 2018 - 18:41 IST
எழுத்தின் அளவு:
More-movies-in-backdrop-of-Farmers-and-Agriculture-based-movie

நகர்ப்புற பின்னணியில் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படங்களே, அதிகமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக கிராமப் புற கதைகளை நோக்கி, இயக்குநர்கள் கவனம் திரும்பி இருக்கிறது.

ஒரு கிடாபியின் கருணை மனு, கொடி வீரன், மன்னர் வகையறா, மதுரை வீரன் உள்ளிட்டப் படங்களை அடுத்து, கிராமப்புற பின்னணியில் நிறைய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், விவசாயத்தை முன்னிறுத்தி கதைகள் பின்னப்பட்டிருக்கிறது.

விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவதை அடுத்தே, இப்படிப்பட்ட கதைகள் பின்னப்படுவதாக, சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

நடிகர் விஜய் நடிக்க, இயக்குநர் முருகதாஸ் இயக்க தயாராகும் படத்தில் முழுக்க முழுக்க கிராமங்களையே மையப்படுத்தி கதை பின்னப்பட்டிருப்பதோடு, விவசாயமும், அரசியலும் கலந்து படமாக்கப்படுகிறது.

அஜித்தின் புதிய படம், சிவகார்த்திகேயனின் சீமராசா, உதயநிதியின் கண்ணே கலைமானே, விஷாலின் சண்டைக் கோழி -2 படம் உள்ளிட்ட பல புதிய படங்கள், கிராமங்களை மையமாகக் கொண்ட கதையம்சம் உள்ளவை.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படமும் விவசாயத்தை முக்கியமாகக் கொண்டவை. இவை தவிர, சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் வெள்ளை யானை, அமீர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை, காக்காமுட்டை படமெடுத்த மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, கத்திரிக்கா வெண்டக்கா உள்ளிட்ட பல படங்கள் விவசாயத்தையும், விவசாயியையும் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள்.
காவிரி பிரச்னை பிரதான பிரச்னையாக இருப்பதை அடுத்து, இயக்குநர்களும், நடிகர்களும் விவசாயத்தை மையமாக வைத்து படம் எடுக்க விரும்புவதாலேயே, விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பைரசியில் சிக்கிய கார்த்திக் சுப்பராஜின் 'மெர்க்குரி'பைரசியில் சிக்கிய கார்த்திக் ... சமுத்திரகனியுடன் சீனுராமசாமி மீண்டும் கூட்டணி சமுத்திரகனியுடன் சீனுராமசாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

tamilselvan - chennai,இந்தியா
17 ஏப், 2018 - 12:08 Report Abuse
tamilselvan தமிழ்நாடு திரைப்படத்துறை தயாரிப்பாளர்கள் விவாசாயத்தை பற்றி படம் எடுக்கிறார்கள் பணம் லாபம் குவிக்கிறது ஆனால் விவசாயிகளுக்கு இவர்கள் என்ன செய்த்தார்கள்
Rate this:
இட்லி நேசன் - Dublin,அயர்லாந்து
17 ஏப், 2018 - 08:21 Report Abuse
இட்லி நேசன் விருப்பு வெறுப்பு எல்லாம் ஒன்னுமில்லை...வியாபார தந்திரம்...இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் விவசாயத்திற்கு குரல் கொடுப்பதை உணர்ந்தே இப்படிப்பட்ட படங்கங்கள் எடுக்கப் படுகின்றன...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17 ஏப், 2018 - 08:05 Report Abuse
Srinivasan Kannaiya அதை கண்டு ஒரு இருபத்தயிந்து சதவிகிதம் மக்கள் விவசாயம் செய்ய முன் வரலாம் ...ஆனால் விளை நிலம் எங்கே சாமி...
Rate this:
KSaiRam -  ( Posted via: Dinamalar Android App )
17 ஏப், 2018 - 07:51 Report Abuse
KSaiRam evanunga vevasayathukku edhuvum seiyamattanga aanal kalla katrathukkaga padam eduppanga muttal koottam (makkal) message solierukangannu koovuvanunga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in