தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன்பே டோனி, வெற்றிச் செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹிந்திப் படங்களில் நடித்தார். அகல்யா என்ற குறும்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு கிளப்பினார். தனக்கு வந்த செக்ஸ் டார்ச்சர்கள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தார். தனது கவர்ச்சி படங்களையும் அடிக்கடி வெளியிடுவார்.
இந்த நிலையில் தற்போது வேர்ல்ட்வார் 2 என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்து நாட்டு உளவாளியாக பணியாற்றிய நாஜி படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நூர் இனயத் கான் கேரக்டரில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். இனயத்கான் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், திப்பு சுல்தான் வழி சமூகத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராதிகா ஆப்தேவுடன் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக், ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்திற்காக இரண்டு மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே.